ஆப்நகரம்

நன்றி மறக்கலாமா.?: தனுஷை கண்டமேனிக்கு விளாசி தள்ளும் ரஜினி ரசிகர்கள்.!

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும், தனுஷ் ரசிகர்களுக்கும் மீண்டும் சோஷியல் மீடியாவில் சண்டைகள் வெடித்துள்ளது.

Samayam Tamil 12 May 2022, 7:33 am
நடிகர் தனுஷ் சினிமாவிற்கு நடிக்க வந்து இருபது வருடங்களை நிறைவு செய்துள்ளார். ஆரம்பத்தில் பல கேலி, கிண்டல்களை எதிர் கொண்டாலும் தற்போது பாலிவுட், ஹாலிவுட் உச்ச நடிகராக கலக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது இருபது ஆண்டு திரை வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
Samayam Tamil Rajini - Dhanush
Rajini - Dhanush


தனுஷ், சினிமாவிற்கு நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனுஷிற்கு பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் தனுஷ். அதில், என்னுடைய ரசிகர்களின் அளவுகடந்த அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் மட்டும் ஈடு செய்துவிட முடியாது. நீங்கள்தான் என் பலம், ஐ லவ் யூ ஆல். என் மீது அன்பு செலுத்தும் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எனக்கு ஆதரவளித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். என்னுடைய அண்ணன் - குரு செல்வராகவன், எனக்குள் இருக்கும் நடிகனை வெளியில் கொண்டுவந்த என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றிகள். குறிப்பாக என் அம்மாவுக்கு நன்றி. எண்ணம் போல் வாழ்க்கை என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனுஷின் இந்த கடிதம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இவ்வளவு பேருக்கு நன்றி சொல்லிய தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும், பல மேடைகளை ரஜினியை புகழ்ந்த தனுஷ், தன்னுடைய கடிதத்தில் அவரைப்பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டாமா? என விமர்சித்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

ஆண்டவர் படத்துல சூர்யாவா..?: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..!
ஐஸ்வர்யா பிரிந்த பின்னர் ரஜினியை பற்றி கடிதத்தில் குறிப்பிட்டால் மீண்டும் ஏதாவது சர்ச்சைகளை கிளம்பும் என்பதற்காகவே தனுஷ் அவர் பெயரை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரஜினி ரசிகர்களின் விமர்சனத்திற்கு தனுஷ் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்