ஆப்நகரம்

ரஜினி அரசியலுக்கு ஒத்துவரமாட்டார், ஆனால் கமல்ஹாசன்... தயாரிப்பாளர் கே ராஜன் ஓபன் டாக்

ரஜினி அரசியலுக்கு ஒத்துவரமாட்டார் என தயாரிப்பாளர் கே ராஜன் சமயம் தமிழ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Feb 2020, 12:51 pm
ரஜினி மென்மையானவர். வீட்டில் சிறு பிரச்சனை என்றால் கூட அவருக்கு கொஞ்சம் மைன்ட் குழம்பிவிடும் என்றும் அவர் அரசியலுக்கு ஒத்துவரமாட்டார் என்றும் தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 68045189


சமயம் தமிழ் இணையதளத்துக்கு கொடுத்துள்ள பேட்டியில் தயாரிப்பாளர் கே ராஜன் தெரிவித்துள்ளதாவது,

சினிமாவில் கறுப்பு பணம் இருப்பது உண்மை. ஆனால் யாரென்று நான் சொல்லமாட்டேன். இனிமேல் ஜெயிலுக்கு செல்ல முடியாது. ஏற்கனவே 5 நாட்கள் ஜெயிலில் இருந்துள்ளேன். ஹேராம் பட வெளியீட்டின் போது, திருட்டி விசிடிக்கு எதிராக நான் போராடச் சென்றேன். என்னை அனுப்பி வைத்தது கமல்ஹாசன். ஆனால் ஜெயிலுக்கு போனதும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதே நேரம் சம்பந்தம் இல்லாமலே, ரஜினிகாந்த் என்னை மொபைலில் அழைத்து, பாராட்டினார். திருட்டி விசிடிக்கு எதிராக போராடியது நல்ல விசயம் என ரஜினிகாந்த் என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார் கே ராஜன்.

ரஜினிகாந்த்தின் அரசியல் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கே ராஜன், ரஜினி அரசியலுக்கு ஒத்துவராத குணம் கொண்டவர். அவருக்கு அரசியல் சரிபட்டு வராது என்று கூறினார்.

ரஜினிகாந்த் சின்ன பிரச்சனை வீட்டில் ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்ளாதவர். அவருக்கு மைன்ட் குழப்பம் ஏற்பட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். ரஜினிகாந்த் மிகவும் மென்மையானவர் என்று கூறிய கே.ராஜன் கமல்ஹாசன் பற்றியும் சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ஹேராம் படத்தின்போது திருட்டு விசிடி பிரச்சனை காரணமாக, கமல்ஹாசன் என்னை அழைத்து தலையிடச் சொன்னார். நான் அந்த நிகழ்வில் ஜெயிலுக்கு போனேன். ஆனால் தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல நடந்துகொண்டார் கமல்ஹாசன். நான் போகச் சொல்லவே இல்லை என கமல்ஹாசன் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார் கே ராஜன். அவரின் முழு பேட்டியையும் இந்த வீடியோவில் காணுங்கள்.

undefined

அடுத்த செய்தி

டிரெண்டிங்