ஆப்நகரம்

Rajini Health: வீட்டில் தீவிர சிகிச்சையில் ரஜினி..? செய்தி தொடர்பாளர் விளக்கம்

ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி பரவி வரும் வதந்திக்கு, அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Nov 2018, 8:05 pm
ரஜினிகாந்திற்கு வீட்டில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என அவரது தரப்பிலிருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 61852449
ரஜினிக்கு என்னாச்சு..?? செய்தி தொடர்பாளர் விளக்கம்


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம், வரும் 29ம் தேதி வெளிவரவுள்ளது. ரூ. 600 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாக இந்த படம் தயாராகியுள்ளது. ரஜினி உடன் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

2.0 படம் வெளிவருவதற்கு முன்னதாகவே, தியேட்டர்கள் உரிமைக்காக விற்பனை செய்யப்பட்ட தொகை மூலம் ரூ.120 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஒரு படம் இவ்வளவு பெரிய தொகையில் வசூல் செய்வது இதுவே முதல் முறையாகும்.

இப்படத்திற்கான முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை. அவ்வாறு முன்பதிவுகள் தொடங்கினால், இதைவிட அதிக தொகை ரிலீஸுக்கு முன்பே வசூல் செய்துவிடும் என பாக்ஸ் ஆஃபிஸ் கணிப்புகள் பல்வேறு வகையில் உள்ளன.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின.

தற்போது இதுதொடர் அவர் தரப்பிலிருந்து விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளிவரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை. அவர் நலமுடன் உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ரஜினி மக்கள் மறம் தரப்பிலிருந்து பேசிய அவரது செய்தி தொடர்பாளர், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்