ஆப்நகரம்

Into the wild rajini ரஜினி நிகழ்ச்சிக்காக டிஸ்கவரி சேனல் தந்த அதிரடி அறிவிப்பு!

டிஸ்கவரியில் வரும் இன் டூ தி வைல்டு ரஜினி எபிசோடுக்காக டிஸ்கவரி சேனல் சேலஞ்ச் ஒன்றை உருவாக்கியுள்ளது.

Samayam Tamil 7 Mar 2020, 2:08 pm
நடிகர் ரஜினிகாந்த், மேன் வெர்சஸ் வைல்டு புகழ் பியர் கிரில்ஸ்ஸுடன் டிஸ்கவரி சேனலில் வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்ற மாதம் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில் இந்த எபிசோடுக்காக டிஸ்கவரி சேனல் டான்ஸ் சேலஞ்ச் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிஸ்கவரி ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil rajini



இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி எனவும், மாஸ் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது எனவும் கூறி இந்த சேலஞ்சை வெளியிட்டுள்ளது டிஸ்கவரி சேனல். இந்த நடனத்தை நீங்களே பாருங்கள்.

இதுகுறித்து இன்னொரு அறிவிப்பையும் அந்த சேனல் வெளியிட்டுள்ளது.


நீங்களும் இந்த பாடலை பதிவிறக்கிக் கொண்டு உங்கள் நடன அசைவுகளை பாடலின் மெட்டுக்கேற்ப எடிட் செய்து டிஸ்கவரிக்கு அனுப்புங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியானது வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்