ஆப்நகரம்

Thalaivar 168 அது இதுனு சொல்லி அந்த பேரயே வச்சிட்டாங்களா?

தலைவர் 168 படத்தின் பெயரை அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

Samayam Tamil 24 Feb 2020, 6:18 pm
ரஜினி நடிப்பில், சிவா இயக்கி வரும் தலைவர் 168 படத்துக்கு அண்ணாத்த என்று பெயர் வைத்துள்ளனர். அதனை தற்போது அறிவித்துள்ளது அந்த படத்தினை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்.
Samayam Tamil annathe


சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள மோஷன் போஸ்டர் இதோ



சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு இரண்டு பெயர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் ஒன்று அண்ணாத்த மற்றொன்று மன்னவன்.

ரஜினி ஏற்கனவே மன்னன் எனும் பெயரில் படம் நடித்திருப்பதால், மன்னவன் பெயரை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. எனவே இந்த படத்தின் பெயரான அண்ணாத்த' வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

வழக்கமாகவே, சன்பிக்சர்ஸ் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திடீரென முக்கிய அறிவிப்புகளை வெளியிடும். அதன்படி, இந்த அப்டேட் வருவதும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக, சன்பிக்சர்ஸ் ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அண்ணாத்த படத்தில் ரஜினியுடன், குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை இமான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்