ஆப்நகரம்

‘ரஜினி 164’ புதுப்பட டைட்டில் இதுதான்!

ரஜினி அரசியலில் கால்பதிப்பாரா? என்ற பல கேள்விகளுக்கிடையே, அவர் ரஞ்சிதுடன் மீண்டும் இணையும் புதிய படத்திற்கான பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

TOI Contributor 25 May 2017, 10:01 am
ரஜினி அரசியலில் கால்பதிப்பாரா? என்ற பல கேள்விகளுக்கிடையே, அவர் ரஞ்சிதுடன் மீண்டும் இணையும் புதிய படத்திற்கான பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil rajinikanth 164 movie name released
‘ரஜினி 164’ புதுப்பட டைட்டில் இதுதான்!


தனுஷின் உண்டர் பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கின்றார். ரஜினியின் 161வது படமாக உருவாகும் இப்படத்திற்கு “காலா” என பெயரிடப்பட்டுள்ளது.

Wunderbar films presents .. superstar Rajinikanth in and as #thalaivar164 pic.twitter.com/rUrMWCYNkJ — Dhanush (@dhanushkraja) May 25, 2017

இந்த படம் மும்பை தாராவியில் நிஜ சூழலில் எடுக்க ஏற்பாடு செய்யும் பொருட்டு ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் இரு தினங்களுக்கு முன் சென்று விட்டனர். இந்நிலையில் இப்படக்குழுவினருடன் ரஜினிகாந்த் வரும் 28ம் தேதி இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் மும்பை சேர்ந்த பிரபலம் ஹாஜி மஸ்தான் அவர்களின் கதை என கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு அவரின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் ஹாஜி மஸ்தானுக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்