ஆப்நகரம்

Rajinikanth: எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி... உடனே ரிப்ளை செய்த ராஜமவுலி அன்ட் கீரவாணி!

Rajinikanth: ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 12 Jan 2023, 1:00 pm
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ள நிலையில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிக்கும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணிக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajinikanth and cinema celebrities greets ss rajamouli and mm keeravani
Rajinikanth: எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி... உடனே ரிப்ளை செய்த ராஜமவுலி அன்ட் கீரவாணி!



ஆர்ஆர்ஆர் படம்

பாகுபலி சீரிஸ் படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை குவித்தது. மேலும் வசூலிலும் வேட்டையாடியது.

Ajith: எங்க லவ் மேட்டரு தெரிஞ்சதும் அஜித் என்ன சொன்னார் தெரியுமா? மனம் திறந்த அமீர் அன்ட் பாவனி!

வசூல் சாதனை

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதுவரை இந்திய படங்கள் வசூலித்த தொகையை விட அதிகம் வசூலித்து மிரட்டியது. தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மைய்யப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்த இப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.

Varisu, Vijay: வாரிசு சக்ஸஸ்... விஜய் வீட்டிற்கே சென்ற தில் ராஜு!

கோல்டன் குளோப் விருது

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுக் கூத்து பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. உலக அளவில் திரைத்துறையில் வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருது இந்திய திரைப்படத்திற்கு கிடைத்திருப்பது இந்திய சினிமாவை பெருமையடைய செய்துள்ளது.

Vijay, Varisu: 'வாரிசை' விட்டுக்கொடுக்காத ஷோபா... என்ன செஞ்சிருக்கார் பாருங்க!

குவியும் வாழ்த்து

இந்நிலையில், இந்த விருதை பெற்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இசையப்புயல் ஏஆர் ரஹ்மான், இசைஞானி இளையராஜா ஆகியோர் தங்களின் சமூக வலைதள பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் இயக்குநரான எஸ்எஸ் ராஜமவுலிக்கும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Varisu Review, Bayilvan: விஜய்யின் வாரிசு அந்தப் படத்தின் அப்பட்டமான காப்பி... போட்டுடைத்த பயில்வான்!

ரஜினிகாந்த் வாழ்த்து

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் “ இந்திய சினிமாவுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுகொடுத்து எங்களை பெருமைபடுத்திய இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் ராஜமவுலிக்கு நன்றிகள்” என அவர்களின் டிவிட்டர் ஹேண்டிலை பதிவிட்டு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த பதிவை பார்த்த எஸ்எஸ் ராஜமவுயும் இசையமைப்பாளர் கீரவாணியும் உடனடியாக நன்றி ரஜினி சார் என பதில் கூறியுள்ளனர்.

Thunivu, Governor: 'ரவீந்தர் இது தமிழ்நாடு.. இங்க உன் வேலைய காட்டாத' துணிவு படத்தில் ஆளுநருக்கு எதிரான வசனம்!

புகழ் பெறுகிறது இந்தியா

இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் எஸ்எஸ் ராஜமவுலி மற்றும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ‛தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் ‛நாட்டு.. நாட்டு…' பாடலுக்காக 'கோல்டன் குளோப்' விருது வென்று தந்திருக்கிறார் கீரவாணி. முன்னமே யு-டியூப்பில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் ரேஸிலும்...

இதேபோல் இசைஞானி இளையராஜா பதிவிட்டிருந்த வாழ்த்து டிவிட்டில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கீரவாணி மற்றும் ராஜமவுலி ஆகியோரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth

எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்