ஆப்நகரம்

பொய், பொய், எல்லாமே பொய்: ரஜினி சொன்னது ஒன்னு, செஞ்சது ஒன்னா இருக்கே

தர்பார் படத்தை பார்த்தவர்கள் ரஜினிகாந்த் பொய் சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள்.

Samayam Tamil 9 Jan 2020, 5:17 pm
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படம் இன்று ரிலீஸானது. படத்தை விளம்பரம் செய்தபோது அதிசயம், அற்புதம் என்றார்கள். அதனால் படத்தில் அதிசயமும், அற்புதமும் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு கதையே இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil rajinikanth


விளம்பரத்தில் சொன்னது தான் பொய் என்றால் ரஜினி ப்ரொமோ வீடியோவில் சொன்னதும் பொய்யாக உள்ளதே. வானத்துல சுடுறது, முட்டியில சுடுறது, ஸ்ட்ரெய்டா ஹார்ட் தான் என்று ரஜினி பன்ச் வசனம் பேசிய ப்ரொமோ வீடியோவை முருகதாஸ் வெளியிட்டார்.

நீங்க இப்படி செய்வீங்கன்னு சத்தியமா எதிர்பார்க்கல முருகதாஸ்!

அந்த வீடியோவை பார்த்துவிட்டு படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஸ்ட்ரெய்டா ஹார்ட்டில் சுடுவேன் என்ற ரஜினி ஒருவரை முழங்காலில் சுட்டது தான். என்ன ரஜினி சார், படத்திலேயே கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இப்படி மாத்தி சுடுகிறீர்களே என்று தர்பாரை பார்த்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



சொல்வதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன் என்று சொல்லும் ரஜினியே இப்படி பேச்சு மாறி முழங்காலில் சுடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அட, அந்த மனுஷன் என்னய்யா பண்ணுவாரு. டைரக்டர் எங்க சுடச் சொன்னாரோ அங்கு சுட்டிருக்காரு என்று சிலர் ஆதரவாகவும் பேசியுள்ளனர்.

ரஜினி, லைகா தலையில் இப்படி இடி இறங்கிடுச்சே

படம் பார்த்த அனைவரும் விமர்சகர்களாக மாறி தர்பாரை சும்மா கிழி, கிழின்னு கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்