ஆப்நகரம்

“ரஜினி எங்களை சந்திக்கவில்லை”! : உண்மை சொல்லும் ரஜினி ரசிகர்கள்!!

“ரஜினி எங்களை சந்திக்கவில்லை”! : உண்மை சொல்லும் ரஜினி ரசிகர்கள்!!

TOI Contributor 3 Feb 2017, 5:40 am
உலக அளவில் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டவர் ரஜினிகாந்த். இவர் தனது ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்துவார், ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வார். ஆனால் தொடர் படப்பிடிப்பு, உடல் நலக்குறைபாடு காரணமாக சில ஆண்டுகளாக தனது ரசிகர்களை ரஜினி சந்திக்கவில்லை.
Samayam Tamil rajinikanth didnt meet us says rajini fan club members
“ரஜினி எங்களை சந்திக்கவில்லை”! : உண்மை சொல்லும் ரஜினி ரசிகர்கள்!!


இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ரஜினி அவர்கள், மாநில மற்றும் மாவட்ட ரசிகர் மன்ற ரசிகர்களை சந்தித்து பேசியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் உரையாடுவது போன்ற புகைப்படமும் வெளியானது. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நிகழவில்லை என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ரஜினி சந்தித்ததாக வெளியான புகைப்படம் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், சமீபத்தில் ரஜினி ரசிகர்களை சந்திக்கவே இல்லை என்றும், சந்திப்பு என்று கூறியது வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்