ஆப்நகரம்

ரூ. 2 கோடி வரை விலைபோகும் ‘காலா’ பட நாய்!

காலா’ படத்தில் ரஜினியுடன் நடித்த நாயை தற்போது 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்க மலேசியாவில் ரசிகர்கள் தயாராக இருப்பதாக அதை வளர்த்து வருபவர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Mar 2018, 5:45 pm
‘காலா’ படத்தில் ரஜினியுடன் நடித்த நாயை தற்போது 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்க மலேசியாவில் ரசிகர்கள் தயாராக இருப்பதாக அதை வளர்த்து வருபவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rajinikanth fans ready to buy kaala dog for rs 2 crore
ரூ. 2 கோடி வரை விலைபோகும் ‘காலா’ பட நாய்!


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில் மும்பை டானாக நடித்துள்ளார் ரஜினி. இந்தப் படத்தின் போஸ்டரில் ரஜினிகாந்த் அருகில் ஒரு நாய் அமர்ந்து இருக்கும். எப்போது ரஜினியுடன் போஸ்டருக்கு போஸ் கொடுத்ததோ அன்றில் இருந்து நாய் மணியின் (நாயின் பெயர் மணி) மார்க்கெட்டும் உச்சத்துக்கு சென்றுவிட்டது.

இந்த நாயை சென்னையின் புறநகரில் இருந்து தேர்வு செய்து சைமன் என்பவர் பயிற்சி அளித்துள்ளார். மணி என்றும் பெயர் வைத்துள்ளார். இந்த நாய்க்கு தற்போதைய வயது 2. இந்த நாயை படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித்திடம் காட்டி ஓகே வாங்குவதற்கு முன்பு, அவருக்கு 30 நாய்களை சைமன் காட்டியுள்ளார்.

இதுகுறித்து சைமன் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘’காலா படத்தில் நடித்ததில் இருந்து நாய் மணி முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மலேசியாவில் இருந்து இந்த நாயை வாங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரை விலை பேசி வருகின்றனர். ரஜினி சாருடன் நடித்த பின்னர் சிலர் இரண்டு கோடி தரவும் தயாராக உள்ளனர். ஆனால், நான் மறுத்துவிட்டேன். தங்களது குழந்தையை விற்க யாருக்குத்தான் மனசு வரும்.

ரஜினி சார் தினமும் ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கி கொடுப்பார். அவருடன் நன்றாக பழகும். நடிப்பதற்கு முன்பு அவர் கேட்கும் முதல் கேள்வி, இதை செய்து காட்டுமா? என்று கேட்பார்’’ என்றார்.

இந்த நாய் ஏற்கனவே நான்கு படங்களில் நடித்துள்ளது. சமீபத்தில் கொடைக்கானல் படத்தில் நடித்துள்ளது. மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்