ஆப்நகரம்

ரஜினிகாந்தை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி கட்டுபாடுகள் !

நடிகர் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் 26 தேதிமுதல் சந்திக்கயுள்ளனர். சந்திக்கவரும் ரசிகர்களுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

TNN 19 Dec 2017, 11:56 am
நடிகர் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் 26 தேதிமுதல் சந்திக்கயுள்ளனர். சந்திக்கவரும் ரசிகர்களுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
Samayam Tamil rajinikanth fans were given strict restriction to see him
ரஜினிகாந்தை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி கட்டுபாடுகள் !


ரஜினிகாந்த் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் தினமும் காலை 7 மணியில் இருந்து மாலை 3 மணிவரை இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
கடந்த மே மாதம் திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் இருந்து ரசிகர்களை அவரை சந்தித்தனர்.

விடுபட்ட சென்னை, காஞ்சீபுரம், வேலூர், மதுரை, விழுப்புரம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை தற்போது மீண்டும் சந்திக்க இருக்கிறார். கிறிஸ்துமஸ் முடிந்த அடுத்த நாள் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறயுள்ளது. முதல் நாளில் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் அழைக்கப்பட உள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் தொலைவில் உள்ள மாவட்டங்களின் நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள்.

சென்னை மாவட்ட நிர்வாகிகளை 30 மற்றும் 31 தேதிகளில் ரஜினிகாந்த் சந்திப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மன்ற பணிகளில் தீவிரமாக செயல்படும் 400 அல்லது 500 பேரை தேர்வு செய்து புகைப்படங்களுடன் மாவட்ட தலைவர்கள் ரசிகர்மன்ற தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.

அந்த பட்டியலை பரிசீலித்து ரஜினிகாந்தை சந்திப்பதற்கான இறுதிபட்டியல் தயாராகி உள்ளது. தினமும் 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1000 நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். பின்னர் மண்டபத்திலேயே ரசிகர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் புகைப்படங்கள் பிரிண்ட் போடப்பட்டு உடனுக்குடன் ரசிகர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ரஜினிகாந்தை பார்க்க வரும் ரசிகர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ரசிகர்கள் அவர்களது குடும்பத்தை உடன் அழைத்து வரக்கூடாது. அதேபோல் ரஜினிகாந் அவர்களின் காலில் விழக்கூடாது என்றேல்லாம் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராகாவேந்தரன் மண்டபத்தை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்