ஆப்நகரம்

அரசியலுக்கு விடுப்பு: சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி!!

நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக இன்றிரவு அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Apr 2018, 2:00 pm
நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக இன்றிரவு அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Kaala_4.


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் , இன்னும் தனது கட்சி பற்றியும் கொள்கை பற்றியும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பைமட்டும் ஆரம்பித்தார். அந்த அமைப்பில் அவரது ரசிகர்கள் அதிகமாக சேர்ந்தனர். மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்ஆர்வமுள்ள பொது மக்களை உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர். இதற்கிடையே ரஜினி அரசியல் விடுப்பு எடுத்துக் கொண்டு இமயமலை சென்று வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அரசியல் தொடர்பான கேள்விகள் எழுப்பியபோது, தான் இன்னும் முழு நேர அரசியல்வாதியாக மாறவிலை என்று பதில் அளித்து இருந்தார். மேலும் ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் சீமான் மற்றும் அவரது கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்தியபோது, போராட்டக்காரர்களை காவலர்கள் தாக்கினர். இயக்குநர் வெற்றி மாறனுக்கும் அடி விழுந்தது. இதையடுத்து காவலர்களை போரட்டக்காரர்கள் தாக்கினர்.

காவல்துறையினரை சிலர் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. காவல்துறையினருக்குஎதிராக நடத்தப்பட்ட தாக்குதல் உச்சகட்ட வன்முறை என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட் பதிவிட்டு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதனால் கோபடமடைந்த இயக்குநர் பாரதியராஜா நடிகர் ரஜினியை விமர்சனம் செய்தார்.

இந்நிலையில்நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றுஇரவு சென்னையிலிருந்து கிளம்பும் நடிகர் ரஜினி, அமெரிக்காவில் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுகிறார். மேலும் கட்சி துவக்குவது குறித்து அமெரிக்காவில் தொழில்நுட்ப வல்லுநர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்