ஆப்நகரம்

50வது நாளில் 'கபாலி': நெருப்புடா..நெருங்குடா..பாப்போம்.!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' திரைப்படம் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வெற்றிகரமான 50வது நாளை தொட்டுள்ளது.

TNN 9 Sep 2016, 3:54 pm
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' திரைப்படம் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வெற்றிகரமான 50வது நாளை தொட்டுள்ளது.
Samayam Tamil rajinikanth kabali completes 50 days
50வது நாளில் 'கபாலி': நெருப்புடா..நெருங்குடா..பாப்போம்.!


நம்பிக்கை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ்டரின் காதல் பற்றிய படைப்பான 'கபாலி' கடந்த ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்ற 'கபாலி' திரைப்படம் முதல் வார வசூலில் அபரிவிதமான சாதனை படைத்தது. உலகளவில் பாக்ஸ் ஆபீசில் முதல் படமாக வசூல் சாதனையை படைத்தது கபாலி.

வெளியாகி 50 நாட்களை கடந்தும் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை கபாலி திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. நாசர், தன்ஷிகா, ராதிகா ஆப்தே, கிஷோர் உள்ளிட்டோர் இணைந்து நடித்த கபாலி படத்தின் 50வது நாளை ரசிகர்கள் ஹெஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்