ஆப்நகரம்

Simbu: வாவ்... சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆடியோ அன்ட் ட்ரெயிலரை வெளியிடப்போவது அவராம்!

Simbu: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலரை வெளியிடப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Aug 2022, 2:20 pm
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Samayam Tamil rajinikanth launches vendhu thanindhathu kaadu trailer and audio
Simbu: வாவ்... சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆடியோ அன்ட் ட்ரெயிலரை வெளியிடப்போவது அவராம்!



சிங்கிள்ஸ் ஹிட்

மூன்றாவது முறையாக இயக்குநர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய 3 பேரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் அனைத்து சிங்கிள் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

Vijay: கையில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணர் வேடத்தில் விஜய்... வைரலாகும் த்ரோபேக் பிக்!

ஆடியோ அன்ட் ட்ரெயிலர்

இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் லாஞ்ச் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Thiruchitrambalam: தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் எப்படி? பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

சிறப்பு விருந்தினர்

அதன்படி செப்டம்பர் 2 ஆம் தேதி வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் லாஞ்ச் நடைபெறவுள்ளதாகவும், இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் யூனிவர்சிட்டி

இந்த நிகழ்ச்சி சென்னை வேல்ஸ் யூனிவர்ச்சிட்டியில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இதானி நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், கயடு லோஹர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்பு இல்லை... 'அப்படி' இறங்கிய நடிகை!

அடுத்த செய்தி

டிரெண்டிங்