ஆப்நகரம்

கமல் தயாரிப்பில் ரஜினி-லோகேஷ் கனகராஜ் படம் டிராப் ஆனதா?

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினி-லோகேஷ் கனகராஜ் படம் உருவாவது சந்தேகம் தான் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 May 2020, 4:38 pm
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் படம் அண்ணாத்த. அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 2021 பொங்கலுக்கு தள்ளிப்போய் உள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நேற்று தான் வெளியிட்டது.
Samayam Tamil Rajinikanth, Lokesh Kanagaraj


இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக அது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை எடுக்கப்படும் பகுதிகளின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கூட நடைபெறவில்லை. அரசு அனுமதி அளித்த நிலையில் சமீபத்தில் தான் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் துவங்கியது.

இந்நிலையில் மேலும் ஒரு சோகமான செய்தி ரஜினி ரசிகர்களுக்கு வந்துள்ளது. ரஜினி அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அந்த படம் துவங்க வாய்ப்பே இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கைதி படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதுவும் இறுதி கட்டத்தில் உள்ளது. தான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என லோகேஷ் இதற்கு முன்பே கூறியுள்ளார். கைதி படம் கமலையும் வெகுவாக கவர்ந்தது.

அதன்பிறகு ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கும் படத்தினை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் என்று செய்தி வெளியானது. தற்போது கொரோனாவால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த படத்தினை ஒப்புக்கொள்ள ரஜினி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த படம் ட்ராப் ஆனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதால் ரஜினி அரசியலில் முழு நேரமும் களமிறங்க விரும்பினால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்