ஆப்நகரம்

’கர்நாடகக்காரன்’ என முத்திரை; மௌனம் காத்து வரும் ரஜினிகாந்த்!

ரஜினி மீதான கர்நாடகா விமர்சனத்திற்கு, பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

Samayam Tamil 17 Apr 2018, 4:55 pm
சென்னை: ரஜினி மீதான கர்நாடகா விமர்சனத்திற்கு, பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
Samayam Tamil Rajinikanth
ரஜினிகாந்த்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ஐபிஎல் போட்டிகள், இளைஞர்களை திசை திருப்பும் என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எனவே பல்வேறு அமைப்புகள் சார்பாக ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் போலீசார் மீது போராட்டக்காரர்களும், போராட்டக்காரர்கள் மீது போலீசாரும் தாக்கிக் கொண்டனர்.

இதில் போலீசாரை தாக்கியவர்கள் மீது கண்டனம் தெரிவித்து, ரஜினி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு இயக்குநர் பாரதிராஜா கடும் அதிருப்தி தெரிவித்தார்.

போராட்டம் குறித்த ஒரு அறிக்கை கூட வரவில்லை. பாதிக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்காக எந்தவொரு அனுதாபமும் தெரிவிக்கவில்லை. இப்போது புரிகிறது நீங்கள் கர்நாடக காவியின் முகம் என்று எனச் சாடினார்.

இதனால் பெரும் வருத்தத்தில் இருக்கும் ரஜினி, காவிரி தொடர்பாக இனி எந்தவித கருத்துகளும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Rajinikanth maintains silent in Bharathiraja's Karnataka comment.

அடுத்த செய்தி

டிரெண்டிங்