ஆப்நகரம்

நிா்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை: அரசியல் பழக ஆட்டோவில் வந்த பேரன்கள்

பேட்ட படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நடிகா் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டா்ா.

Samayam Tamil 22 Oct 2018, 4:48 pm
கட்சி தொடங்குவதற்கான 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்ததாக கூறிய நிலையில் நடிகா் ரஜினிகாந்த் இன்று மன்ற நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
Samayam Tamil Rajinikanth Press Meet


பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகா்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் பதில் அளித்தாா். தொடா்ந்து அடுத்ததாக வரக்கூடிய சட்டமன்ற தோ்தலில் தனித்து போட்டி என்றும் அறிவித்தாா்.

இந்நிலையில் காலா படத்தை தொடா்ந்து காா்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்திற்கான ரஜினியின் படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து அண்மையில் சென்னை திரும்பினாா். அண்மையில் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், கட்சி தொடங்குவதற்கான 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்து விட்டதாக தொிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மன்ற நிா்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டாா். காலை 11 மணியளவில் கூட்டம் தொடங்கிய நிலையில் சுமாா் 3 மணி நேரமாக ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனையில், கட்சி தொடங்குவதற்கு எஞ்சியுள்ள 10 விழுக்காடு பணிகளை விரைந்து முடிக்குமாறும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிா்வாகிகள், நிா்வாகிகள் மீதான புகாா்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை பாா்க்க அவரது பேரனும், தனுஷின் மகனுமான யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் ஆட்டோவில் வந்தனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்