ஆப்நகரம்

முரட்டு தைரியம் தேவையில்லை : ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பின் ரசிகர்களை நேரில் சந்தித்தார்.

TOI Contributor 15 May 2017, 9:55 am
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பின் ரசிகர்களை நேரில் சந்தித்தார்.
Samayam Tamil rajinikanth speech with his fans
முரட்டு தைரியம் தேவையில்லை : ரஜினிகாந்த்!


ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள், ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த நிலையில், ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி அறிக்கை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, குறுகிய காலத்தில் அனைத்து ரசிகர்களையும் சந்தித்து அவர்களுடன் தனித்தனியே புகைப்படம் எடுப்பது கடினம். அதனால் வரும் காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அவர்களை அழைத்து தனித்தனியாக புகைப்படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். விரைவில் அந்த நிகழ்ச்சி நடைபெறும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதன்படி அவரது ரசிகர்களை கோடம்பாக்கத்தில் சந்தித்தார் ரஜினிகார்ந்த்.அப்போது ரஜினிகாந்த் கூறுகையில்,’ சென்னையில் இருக்கும் மற்றொரு சகோதரர் எஸ்.பி. முத்துராமன். எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் படப்பிடிப்புக்கு செல்ல லேட்டாகும். அதை மாற்றிக்கொள்ள உதவியர் முத்துராமன். சில காரணங்களால், எங்களால் எல்லாத்தையும் ஒழுங்கா பண்ண முடியும் என்பதை நிரூபிப்போம் என காண்பிக்கவே இந்த சந்திப்பு.


ரஜினி ஸ்திரமாக இருக்க மாட்டார் என செய்திகள் வெளியாகின. படங்கள் வெளியாகும் நேரத்தில் மட்டும் ரசிகர்கள் சந்திபார் என்ற அவதூறு பேசினார்கள். தண்ணீரில் கால்வைத்த பின் நிறைய முதலைகள் உள்ளது என தெரிகிறது.

அதன்பின் கால் எடுக்க மாட்டேன் என முரட்டு தைரியம் அவசியமில்லை. அரசியல் சூழ்நிலையை பொறுத்தவரையில் எனது ஆதரவு உள்ளது என கூறும் நம்பாதீர்கள். குடிப்பழக்கம், புகைப்பழக்கங்களை ரசிகர்கள் குறைக்க வேண்டும்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்