ஆப்நகரம்

இது வேணாம், விஷ பரீட்சைனு சொன்னோமே தலைவா: ரஜினி ரசிகாஸ்

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதை பார்த்து தான் ரஜினி ரசிகர்கள் இப்படி தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 23 Dec 2020, 4:25 pm
கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பை கடந்த 14ம் தேதி துவங்கினார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
Samayam Tamil rajinikanth


இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். ரஜினி இன்று மாலையே சென்னை திரும்புகிறாராம். ரஜினி மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற தகவல் வெளியானதுமே வேண்டாம் தலைவா, இது விஷ பரீட்சை என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

இத்தனைக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் ஐபிஎல் போட்டிகளை போன்று bio bubble முறை பின்பற்றப்பட்டும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் நாங்கள் தான் அப்பொழுதே சொன்னோமே என்கிறார்கள்.

Annaatthe Shooting அரசியல் அழைக்கிறது: அண்ணாத்தக்காக 14 மணிநேரம் தீயா வேலை செய்யும் ரஜினி

அடுத்த மாதம் கட்சி துவங்குவதால் அதற்குள் அண்ணாத்த பட வேலையை முடிக்க நினைத்து தினமும் 14 மணிநேரம் நடித்து வந்துள்ளார் ரஜினி. வரும் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடுவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து 30ம் தேதி சென்னைக்கு வந்து 31ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுவிட்டு மீண்டும் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டார். ஆனால் அவரின் திட்டம் எல்லாம் இந்த கொரோனாவால் வீணாகிப் போய்விட்டது.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. முன்னதாக ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த தமன்னா, சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பினார்கள்.

இதை எல்லாம் பார்த்துவிட்டு தான் ரஜினி ஹைதராபாத் கிளம்புகிறார் என்றதுமே ரசிகர்கள் கவலை அடைந்தனர். கடைசியில் அவர்கள் பயந்தது போன்றே படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நல்ல வேளை ரஜினிக்கு பாதிப்பு ஏற்படவில்லையே என்று ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்