ஆப்நகரம்

ஹய்யோ, சீக்கிரம் 6.30 மணி ஆக மாட்டேங்குதே: வாட்ச்சை, வாட்ச்சை பார்க்கும் ரஜினி ரசிகர்கள்

தர்பார் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Samayam Tamil 16 Dec 2019, 9:27 am
தர்பார் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Samayam Tamil rajinikanth starrer darbar trailer to be released today
ஹய்யோ, சீக்கிரம் 6.30 மணி ஆக மாட்டேங்குதே: வாட்ச்சை, வாட்ச்சை பார்க்கும் ரஜினி ரசிகர்கள்


தர்பார் ட்ரெய்லர்

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் அன்று ட்ரெய்லர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். ஆனால் தர்பார் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று முருகதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதனால் சீக்கிரம் மாலை வராதா, ட்ரெய்லர் வெளியாகாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ட்ரெய்லர் வெளியாகும் என்பதை அறிவிக்க முருகதாஸ் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். ட்ரெய்லரில் ஆக்ஷன் தூக்கலாக இருக்கும் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பல காலம் கழித்து ரஜினியை காக்கிச் சட்டையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்தி ட்ரெய்லர்

தர்பார் படத்தின் இந்தி ட்ரெய்லர் இன்று மாலை மும்பையில் நடக்கும் விழா ஒன்றில் வெளியிடப்படுகிறது. அந்த விழாவில் முருகதாஸ், ரஜினிகாந்த், அனிருத், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். வழக்கம் போன்று நயன்தாரா கலந்து கொள்ள மாட்டாராம். நயன்தாரா தற்போது ஆர்.ஜே. பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை வேடம்

தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரி ஆதித்யா அருணாச்சலம் மற்றும் சமூக ஆர்வலர் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். தர்பார் அரசியல் பற்றிய படம் என்று கூறப்பட்ட நிலையில் அதை முருகதாஸ் மறுத்தார். இது அரசியல் படம் அல்ல பக்கா கமர்ஷியல் படம் என்றார். தர்பார் ஜனவரி மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்