ஆப்நகரம்

தீவிர அரசியலுக்கு முன்பு, இமயமலைக்கு நாளை ஆன்மீகப் பயணம் செல்லும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நாளை தனது இமயமலைப் பயணத்தை தொடங்கவுள்ளார்.

Samayam Tamil 9 Mar 2018, 5:24 pm
சென்னை: ரஜினிகாந்த் நாளை தனது இமயமலைப் பயணத்தை தொடங்கவுள்ளார்.
Samayam Tamil rajinikanth starts a spiritual journey to himalayas
தீவிர அரசியலுக்கு முன்பு, இமயமலைக்கு நாளை ஆன்மீகப் பயணம் செல்லும் ரஜினிகாந்த்!


நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

தனது மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி, தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நாளை இமயமலைக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் சிம்லா செல்கிறார்.

Read this news in Telugu

அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்களிடம் ஆசி பெறவுள்ளார்.

Rajinikanth starts a spiritual journey to Himalayas.

அடுத்த செய்தி

டிரெண்டிங்