ஆப்நகரம்

இப்பவே வரேன் கண்ணா: மனதை மாற்றிக் கொண்ட ரஜினி

தலைப்பை பார்த்துவிட்டு ரஜினி பற்றி நீங்களாக ஒரு முடிவுக்கு வந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

Samayam Tamil 4 Oct 2020, 2:14 pm
தர்பார் படத்தை அடுத்து ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள்.
Samayam Tamil rajinikanth


மீண்டும் படப்பிடிப்புகளை துவங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ள நிலையில் அண்ணாத்த ஷூட்டிங் துவங்கவிருக்கிறது. அண்ணாத்த படப்பிடிப்பு வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவிருக்கிறது.

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ரஜினி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் ரஜினியும் 10ம் தேதி நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.

ரஜினி காரில் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு செல்கிறாராம். மற்றவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் ஹைதராபாத்திற்கு செல்கிறார்களாம். ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகளை தான் முதலில் படமாக்கவிருக்கிறாராம் சிவா.

அண்ணாத்த படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால் அது நடக்காமல் போய்விட்டது. இதையடுத்து அண்ணாத்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

ஹைதராபாத் மட்டும் அல்ல சென்னையிலும் சில ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகிறார்களாம். அண்ணாத்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். லாக்டவுனுக்கு முன்பு தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.

என்னாது, அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மா நயன்தாராவா?

இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் அண்ணாத்த படத்தின் கதை இது தான் என்று கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதன்படி ரஜினி-நயன்தாரா ஜோடியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம். கீர்த்தியை தங்கள் வீட்டு மருகளாக்கிக் கொள்ள குஷ்புவும், மீனாவும் போட்டி போடுகிறார்களாம். இருப்பினும் இந்த கதையை சிவா உறுதி செய்யவில்லை.

அண்ணாத்த பற்றி சிவா எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருப்பது ரஜினி ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்