ஆப்நகரம்

கல்லூரி பேராசிரியராக மாறிய நடிகர் ரஜினி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறாராம்.

Samayam Tamil 7 Jun 2018, 3:42 pm
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறாராம்.
Samayam Tamil rajini with karthik


நடிகர் ரஜினி நடிப்பில் உருவான ‘காலா’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினி தனது அடுத்தப் படத்திற்காக நேற்று இமயமலை சென்றுவிட்டார். அங்குதான் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடியுடனும், தலை முடியையும் கருப்பு நிறத்தில் காட்சியளித்து வந்தார். இந்த லுக்கில்தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்புகளுக்காக் ரஜினி டேராடூன் சென்றுவிட்டார். படக்குழுவும் வேலைகளை முன்பே தொடங்கிவிட்டது. மேலும் இப்படம் அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரியிலும் இமயமலை அடிவார பகுதிகளில் எடுக்கப்படவுள்ளதாம். மேலும் கல்லூரி என்பதால் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என தகவல் பரவிவருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்