ஆப்நகரம்

கொரோனா லாக்டவுன் பாதிப்பு: 1000 நடிகர்களின் குடும்பங்களுக்கு உதவும் ரஜினிகாந்த்

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை வேலை இழந்த நடிகர்களுக்கு உதவும் விதமாக நடிகர் சங்கத்தின் 1000 நலிந்த கலைஞர்கள் குடும்பத்திற்கு உதவி பொருட்கள் வழங்கவுள்ளார் ரஜினிகாந்த்.

Samayam Tamil 23 Apr 2020, 12:17 am
கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா துறை முற்றிலும் முடங்கியுள்ளது. சினிமா ஷூட்டிங்கை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் சிறிய நடிகர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. தினமும் வரும் கூலியை மட்டுமே நம்பி இருந்த அவர்கள் தற்போது வருமானம் இன்றி இருக்கின்றனர்.
Samayam Tamil Rajinikanth


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்கள் சங்கமான FEFSIகக்கு 50 லட்சம் ருபாய் கொடுத்தார். உணவுக்கு கூட வழியில்லாமல் பலர் இருக்கிறார்கள் என FEFSI சங்க தலைவர் அறிக்கை வெளியிட்ட பிறகு ரஜினி இந்த உதவியை செய்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் உதவி கரம் நீட்டியுள்ளார் ரஜினிகாந்த். நடிகர் சங்கத்தில் உள்ள 1000 நடிகர்களின் குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கி தர உள்ளார் ரஜினிகாந்த்.

இதன் மூலமாக பணம் இன்றி குடும்பத்தை நடத்தமுடியாமல் திணறும் பலருக்கு உதவி கிடைக்கும்.

இது மட்டுமின்றி ரஜினியின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.காய்கறிகள் , மளிகை பொருட்கள், பால் என இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்