ஆப்நகரம்

ஜனவரிக்குப் பின் ரஜினி அரசியல் அறிவிப்பு வெளியிடுவார்: சத்தியநாராயணா!

அரசியல் கட்சி துவங்குவது குறித்து ஜனவரிக்குப் பின் ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று அவரது சகோதரர் சத்தியநாராயணா கூறியுள்ளார்.

TNN 30 Nov 2017, 2:20 am
அரசியல் கட்சி துவங்குவது குறித்து ஜனவரிக்குப் பின் ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று அவரது சகோதரர் சத்தியநாராயணா கூறியுள்ளார்.
Samayam Tamil rajinikanth will announce his political entry in january actors brother says
ஜனவரிக்குப் பின் ரஜினி அரசியல் அறிவிப்பு வெளியிடுவார்: சத்தியநாராயணா!


வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அரசியலுக்கு வருவது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், ரசிகர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்து வருகிறார். இந்த நிலையில், டிசம்பர் 12ம் தேதி தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அப்போது தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் ரஜினி அரசியலி கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தர்மபுரியில் நடந்த ரஜினிகாந்த் மன்ற நிர்வாகி இல்லத்திருமண விழாவில் அவரது அண்ணன் சத்தியநாராயணா கலந்து கொண்டார்.

அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: ரஜினி தெரிவித்த போர் இன்னும் துவங்கவில்லை. தன்னுடைய பிறந்தநாளின் போது கட்சி அறிவிப்பை வெளியிடமாட்டார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரசிகர்களை சந்திக்கிறார். அப்போது தமிழக மக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு நல்லதே செய்வார் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth's elder brother Sathyanarayana Rao Gaekwad said on Wednesday that the Tamil superstar would announce his political entry and his party in January. Gaekwad was in Dharmapuri to participate in the wedding of Rajinikanth fan club district secretary Gandhi's son.

அடுத்த செய்தி

டிரெண்டிங்