ஆப்நகரம்

தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினிகாந்த்!

தர்பார் படப்பிடிப்பின் போது மனைவி லதா உடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 30 Sep 2019, 6:57 pm
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 167 ஆவது படமான தர்பார் படத்தின் பிஸியாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். ராஜஸ்தான், மும்பை ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Samayam Tamil Rajiinkanth


இந்த நிலையில், தர்பார் படப்பிடிப்பில் இருந்த தனது கணவர் ரஜினியை பார்ப்பதற்கு அவரது மனைவி லதா சென்றுள்ளார். அப்போது, போலீஸ் உடையில் இருந்த தனது கணவரைக் கண்டு மெய்சிலிர்த்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் சேரில் கால் மேல் கால் போட்டு போலீஸ் உடையில் அமர்ந்துள்ளார். அவரது கழுத்தில் கையை போட்டுக்கொண்டு நின்றபடி லதா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி மருத்துவமனையில் அனுமதி!

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், தம்பி ராமையா, ப்ரதீக் பாப்பர், நவாப் ஷா ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் 2ஆவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது.

Thalapathy 64 ஃபர்ஸ்ட் அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்: அப்போ இவர்தான் வில்லனா?


இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, படப்பிடிப்பும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு உடன் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாகவே நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

ஒரே நாளில் 4: இதுவா, அதுவான்னு குழப்பத்தில் யோகி பாபு ரசிகர்கள்

ரஜினியின் தர்பார் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வரும் நிலையில், அவரது ரசிகர்கள் காரில் தர்பார் போஸ்டர் ஒட்டுவது, சைக்கிளில் போஸ்டர் ஒட்டுவது என்று விதவிதமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்