ஆப்நகரம்

பாகுபலி, தங்கலை மிஞ்சிய 2.0! வெளியாவதற்குள் பிரமிக்க வைக்கும் வசூல்!!

பாகுபலி, தங்கலை மிஞ்சிய 2.0! வெளியாவதற்குள் பிரமிக்க வைக்கும் வசூல்!!

TOI Contributor 14 Mar 2017, 1:58 pm
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 110 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
Samayam Tamil rajinikanths 2 0 collected rupees 110 crores before its release
பாகுபலி, தங்கலை மிஞ்சிய 2.0! வெளியாவதற்குள் பிரமிக்க வைக்கும் வசூல்!!


ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. 2.0 படம் தற்போது ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளையும் சேர்த்து ஜீ நெட்வொர்க் உரிமத்தை வாங்கியுள்ளது.

பாகுபலி படத்தின் சாட்டிலைட் உரிமம் 97 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ள நிலையில் அந்த சாதனையை 2.0 முறியடித்துள்ளது. அதே போல் அமீர்கான் நடித்து ஹிட்டான தங்கல் படத்தின் சாட்டிலைட் உரிமம் 75 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. 2.0 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே 110 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்