ஆப்நகரம்

தீபாவளிக்கு ரஜினியோடு சண்டை போடும் கோல்மால்!!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0.

TNN 9 Feb 2017, 5:58 pm
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தை லைகா நிறுவனம் தன்னுடைய புரோடக்ஷன் பேனரில் தயாரிக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil rajinikanths 2 0 to clash with this biggie on diwali
தீபாவளிக்கு ரஜினியோடு சண்டை போடும் கோல்மால்!!


இந்நிலையில், இப்படத்திற்கு போட்டியாக தொடர்ந்து காமெடி படமாக ஹிட் கொடுத்து நான்காவது பாகமாக உருவாகி வரும் பிளாக்பஸ்டர் படமான கோல்மால் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. முழுக்க முழுக்க காமெடி கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. தில்வாலே மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை இயக்கிய ரோகித் செட்டி இப்படத்தையும் இயக்குகிறார். இதில் அஜய் தேவ்கன், அர்ஷாத் வர்ஷி, துஷார் கபூர் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் அடுத்த மாதம் தொடங்கயிருக்கிறது. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு இப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கோல்பால் படத்தின் முதல் பாகம் 2006ம் ஆண்டும், 2ம் பாகம் 2008ம் ஆண்டும், 3ம் பாகம் 2010ம் ஆண்டு வெளியாகி ஹிட் படமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

It was being said sometime back that the fourth installment in the blockbuster comedy franchise Golmaal would clash off against 2.0 on Diwali.

அடுத்த செய்தி

டிரெண்டிங்