ஆப்நகரம்

நயன் பக்கத்துல எனக்கும் ரூம் வேணும்! கடுப்பான ‘தர்பார்’ பட தயாரிப்பாளர்!

ரஜினி நடிப்பில் உருவாகும் ‘தர்பார்’ படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர்,நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் மீது பயங்கர கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 11 Apr 2019, 4:45 pm

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
Samayam Tamil darbar


மும்பையில் தர்பார் ஆரம்பம்

இந்நிலையில் நடிகை நயன்தாரா, ஷூட்டிங்கில் பங்கேற்க நேற்று மும்பை சென்றுள்ளார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். நயன்தாரா எங்கு சென்றாலும் அவர் கூடவே சென்று பட தயாரிப்பாளர்களுக்கு செலவை வைத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதேபோல் நேற்று நயன்தாரா கூடவே மும்பை வந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நயன்தாரா தங்கியிருக்கும் அதே ஓட்டலில் அவர் தங்கியிருக்கும் அறை பக்கத்தில் தனக்கு அறை ஒதுக்கி தர வேண்டும் என தர்பார் பட தயாரிப்பாளரை கேட்டுள்ளாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதனால் படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் மீது செம கடுப்பில் உள்ளாராம்..

விக்னேஷ்சிவன் & நயன்தாரா காதல் விஷயம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றி வருவதும், அப்போது எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். தற்போது இருவரும் சென்னையில் ஒரே வீட்டில் குடியேறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்