ஆப்நகரம்

கேரளாவில் அஜீத், விஜய் சாதனையை முறிடியக்க முடியாத ‘காலா‘!

கேரளாவில் வெளியான ‘காலா’ படம் அஜீத், விஜய் படங்களின் சாதனைகளை முறியடிக்க முடியவில்லை.

Samayam Tamil 10 Jun 2018, 2:15 pm
கேரளாவில் வெளியான ‘காலா’ படம் அஜீத், விஜய் படங்களின் சாதனைகளை முறியடிக்க முடியவில்லை.
Samayam Tamil Kaala Movie
காலா திரைப்படம்


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படம் உலக முழுவதும் 1,800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ‘காலா’ திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தாலும் கேரளாவில் அஜீத்தின் ‘விவேகம்‘ மற்றும் விஜய்யின் ‘மெர்சல்’ சாதனையை முறியடிக்க முடியவில்லை. கேரளாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படம்தான்.

இந்த படம் முதல் நாளில் 1,370 காட்சிகள் திரையிடப்பட்டன. அதனையடுத்து அஜீத்தின் ‘விவேகம்’ 1,316 காட்சிகளும், விஜய்யின் ‘மெர்சல்’ 1,260 காட்சிகளும் முதல் நாளில் திரையிடப்பட்டன. ஆனால் ரஜினியின் ‘காலா’ திரைப்படம் நேற்று 1,065 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டது.

ரஜினியின் முந்தைய படமான ‘கபாலி’ படத்தின் முதல் நாள் காட்சிகளைவிட இது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth's Kaala couldn't beat Ajith, Vijay Box Office record in Kerala.

அடுத்த செய்தி

டிரெண்டிங்