ஆப்நகரம்

ரஜினியின் காலா ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா கரிகாலன் படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Apr 2018, 10:31 pm
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா கரிகாலன் படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil kaala


முதலில் ஏப்ரல் 27ம் தேதி காலா திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டம் 40 நாட்களுக்கும் மேலாக நடந்தது. இதனால் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. மற்ற பட வேலைகளும் நடக்கமால் இருந்தது.

தற்போது ஸ்டிரைக் முடிந்து இன்று முதல் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காலா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அப்பட தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.



ஜூன் 7ம் தேதி இந்த படம் உலகெங்கும் பல மொழிகளில் வெளியாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
பா ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்