ஆப்நகரம்

செம்ம வெயிட்டு, நம்ம காலா சேட்டு; ‘காலா’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

காலா படத்தில் இடம்பெற்றுள்ள ’செம்ம வெயிட்டு’ பாடல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 May 2018, 7:52 pm
சென்னை: காலா படத்தில் இடம்பெற்றுள்ள ’செம்ம வெயிட்டு’ பாடல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Semma Weightu
செம்ம வெயிட்டு


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’. மும்பையை கதைக் களமாக கொண்டு, தாதா கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், சுகன்யா, சாயாஜி ஷிண்டே, வத்திக்குச்சி திலீபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, காலா படத்தில் இடம்பெற்ற ’செம்ம வெயிட்டு’ பாடலின் சிங்கிள் வெளியாகியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
Rajinikanth's Kaala movie Semma Weightu song Single released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்