ஆப்நகரம்

ரஜினிகாந்தின் 2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு

சங்கா் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பிரமாண்டமாக தயாராகி வரும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Jul 2018, 11:53 pm
சங்கா் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பிரமாண்டமாக தயாராகி வரும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 2.0


ரஜினிகாந்த் நடிப்பில் சங்கா் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் எந்திரன். இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்ததைத் தொடா்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் தயாராகி வருகிறது.

படத்திற்கான மொத்த பணிகளையும் முடித்து 2017 தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி செய்தது. படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று விட்டாலும், கிராபிக்ஸ் காட்சிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாததால் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை.

இந்நிலையில் படத்தின் இயக்குநா் சங்கா் செவ்வாய் கிழமை இரவு படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளா்ா. அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், படத்திற்கான அனிமேஷன் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. எனவே படம் வருகிற நவம்பா் 29ம் தேதி வெளியிடப்படும் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்