ஆப்நகரம்

அமெரிக்காவில் ரஜினியை மடக்கிப் பிடித்த ரசிகர்கள்!

அமெரிக்கா வந்திருந்த நடிகர் ரஜினிகாந்தை, ரசிகர்கள் மடக்கிப் பிடித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Samayam Tamil 27 Dec 2018, 4:33 pm
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘2.0’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
Samayam Tamil rajini


இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மற்றொரு பக்கம் அவரின் அரசியல் வேலைகளும் நிகழ்ந்து வருகின்றன.

இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த், ஓய்வுக்காக தனது குடும்பத்தாருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை அங்குதான் கொண்டாடினார். அடுத்ததாக புத்தாண்டையும் அங்குதான் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினி ஸ்வெட்டர் போட்டு தலையில் குல்லா அணிந்து கண்டுபிடிக்க முடியாத படி நியூயார் நகரில் பொது இடத்திற்கு வந்துள்ளார். ஆனாலும் அவரின் அடையாளம் கண்ட ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்