ஆப்நகரம்

ஒத்தைல நிக்கும் காலா, மொத்தமாக வரும் அவெஞ்சர்ஸ்! வெற்றி யாருக்கு?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படமும், உலகப் புகழ்பெற்ற அவேன்ஜர்ஸ் இனிபினிட்டி வார் படமும் ஒரே நாளில் வெளியாவதால், ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Mar 2018, 5:04 pm
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படமும், உலகப் புகழ்பெற்ற அவேன்ஜர்ஸ் இனிபினிட்டி வார் படமும் ஒரே நாளில் வெளியாவதால், ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil காலா மற்றும் அவெஞ்சர்ஸ்
ஒரே நாளில் வெளியாகும் காலா மற்றும் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டு வார்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கபாலி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இருவரும் நடிகர் தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ‘காலா’ படத்தில் ஒன்று சேர்ந்தனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே யூடியுபில் வெளியான நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஹாலிவுட்டில் உருவாகிவரும் மிகப்பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படமும் அதே நாளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
al
காலா படம் மூன்று மொழிகளில் வெளியாவதால், அவெஞ்சர்ஸ் படத்தின் இந்திய வசூலை காலாவோ, அல்லது காலாவின் வசூலை அவென்ஜர் படமோ பாதிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. எதுவாக இருப்பினும், இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் செம குதூகலத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்