ஆப்நகரம்

டப்பிங் இல்லாத ‘சர்வம் தாள மயம்’!

ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ‘சர்வம் தாள மயம’ படம் டப்பிங் இல்லாமல் நேரடி ஒலிப்பதிவில் உருவாகியுள்ள படம்.

Samayam Tamil 4 Apr 2018, 5:14 pm
ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ‘சர்வம் தாள மயம’ படம் டப்பிங் இல்லாமல் நேரடி ஒலிப்பதிவில் உருவாகியுள்ள படம்.
Samayam Tamil GVPrakash


ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாள மயம்’. இந்தப் படம் முழுக்க லைவ் சிங்க் சவுண்ட் என்று சொல்லக்கூடிய நேரடி ஒலிப்பதிவுக் காட்சிகளில் படமாக்கப்பட்டுள்ளது. முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள இப்படத்தில் நேரடி ஒலிக்கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், நாயகியாக அபர்ணா பாலமுரளியும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு முன்பே இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. படம் தற்போது வெளியாகும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள ‘செம’ படத்தை அடுத்து இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்