ஆப்நகரம்

ரஜினிகாந்த் கட்சியில் இணைய லைகா இந்திய அதிகாரி பதவி ராஜினாமா!!

லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளரும், இந்திய தலைமை அதிகாரியுமான ராஜூ மகாலிங்கம் ரஜினிகாந்தின் கட்சியில் இணைவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 3 Jan 2018, 2:01 pm
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளரும், இந்திய தலைமை அதிகாரியுமான ராஜூ மகாலிங்கம் ரஜினிகாந்தின் கட்சியில் இணைவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil raju mahalingam quits lyca to join thalaivar
ரஜினிகாந்த் கட்சியில் இணைய லைகா இந்திய அதிகாரி பதவி ராஜினாமா!!

இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லைகா நிறுவனத்தில் இந்திய தலைமை அதிகாரியாகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ராஜூ மகாலிங்கம். லைகா நிறுவனம்தான் ரூ. 450 கோடி செலவில் எந்திரன் 2 படத்தை அதாவது 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். இவரது தீவிர ரசிகராக இருப்பவர் ராஜூ மகாலிங்கம். இவர் ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து ராஜூ மகாலிங்கம் இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘’முதலில் நான் ரஜினி சாரின் ரசிகர். கடந்த மூன்று ஆண்டுகளாக 2.0 படம் எடுக்கும்போது அவரை உடன் இருந்து கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். எளிமை, நேர்மை, வெளிப்படைத்தன்மை என்றால், ரஜினி சார்தான். தற்போது தமிழகத்திற்கு தேவைப்படும் அனைத்து குணங்களும் அவரிடம் உள்ளது. ரஜினி சார் கட்சியில் நான் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. உறுப்பினராக சேர்ந்து உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்