ஆப்நகரம்

Nagarjuna : நடிகை சமந்தா மாமனாருக்கு ஜோடியான ராகுல் ப்ரீத் சிங்!

பிரபல நடிகை சமந்தாவின் மாமனார் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 26 Mar 2019, 3:11 pm
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். தற்போது இவர் தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
Samayam Tamil rakul-preet-singh


இந்நிலையில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் பெயர் ‘மன்மதுடு 2’ தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடிகை சமந்தாவின் மாமனார் நாகார்ஜூனாவுக்கு இளம் நடிகை ராகுல் ப்ரீத் சிங் தற்போது ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு முன் நடிகை ராகுல் ப்ரீத் சிங், சமந்தாவின் கணவர் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரது அப்பாவிற்கு ஜோடியாக நடித்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வாய்ப்பு குறைந்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரோ என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்