ஆப்நகரம்

அயலான் பற்றி வதந்தி பரப்பியவர்களை வெளுத்து வாங்கிய ராகுல் ப்ரீத்

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ஷூட்டிங்கிற்கு ராகுல் வர மறுப்பதாக பரவிய வதந்திக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 27 Jun 2020, 9:52 am
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத். அவர் தற்போது தன் கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடித்து வரும் அயலான் படமும் அதில் ஒன்று.
Samayam Tamil Rakul Preet and Sivakarthikeyan


அயலான் படத்தின் படப்பிடிப்பு நீண்ட தாமதத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய நிலையில், அந்த ஷுட்டிங்கில் ராகுல் ப்ரீத் மார்ச் மாதம் கலந்து கொண்டார்.

இது வேற்று கிரக வாசிகளை பற்றிய படம் என்பதால், ராகுல் ப்ரீத் ஒரு வானியல் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கொரோனா முழு ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.

மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் சூட்டிங் நடத்த அரசு அனுமதி வழங்கவில்லை என்பதால், மற்ற படங்களை போலவே இன்னும் அயலான் படமும் துவங்காமல் இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங்கை மீண்டும் துவங்க உள்ளதாகவும், அதில் ராகுல் பிரித் நடிக்க மறுக்கிறார் என்றும் செய்தி பரவி உள்ளது. ஆரம்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ராகுல் கொரோனா வைரஸ் காரணம் காட்டி ஷுட்டிங் வர மறுக்கிறார் என்றும், அதனால் அவருக்கு பதில் வேறு நடிகையை படக்குழு நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளது என்றும் ஒரு இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதை பார்த்து கடும் கோபமான ராகுல் ப்ரீத் அது வதந்தி என விளக்கமளித்துள்ளார். மேலும் அந்த இணையதளத்தையும் அவர் கோபத்துடன் திட்டியுள்ளார்.

"தயவு செய்து யார் இப்போது ஷூட்டிங் துவங்குகிறார்கள், எங்கு நடத்துகிறார்கள்.. சொல்லுங்கள் நான் மீண்டும் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார் அவர்.


இது பற்றி அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் பேசியுள்ளார். "நான் பணியாற்றியதிலேயே ராகுல் ப்ரீத் மிகவும் ப்ரொபஷனல் ஆன நடிகை. இது போன்ற வதந்திகள் மீடியாக்களில் வருவது மிகவும் துரதிஷ்டவசமானது. நாங்கள் தற்போது முழு உத்வேகத்துடன் தான் இருக்கிறோம். சகஜ நிலை திரும்பிய பிறகு மீண்டும் பணிகளை துவங்கி சூட்டிங்கை முடிக்க உள்ளோம்" என அவர் கூறியுள்ளார்.


அதற்கு பதிலளித்துள்ள ராகுல் ப்ரீத் "அன்பான வார்த்தைகள் சொன்னதற்காக நன்றி. ஷுட்டிங் துவங்குவதற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


படக்குழுவே தற்போது விளக்கம் அளித்து விட்டதால், அயலான் படத்தில் இருந்து ராகுல் நீக்கப்படுகிறார் என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அயலான் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

அயலான் படம் மட்டுமின்றி தன் கைவசம் இந்தியன் 2 படத்தையும் வைத்திருக்கிறார் ராகுல் ப்ரீத். ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஒரு முக்கிய ரோல் வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்து மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் ராகுல். அந்த படத்திற்கு சலே சலோ என பெயரிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்