ஆப்நகரம்

‘துப்பறிவாளன்’படத்தில் ராகுல் ப்ரீத் சிங்குக்கு பதில் அனு இமானுவேல்!

துப்பறிவாளன்’படத்தில் நடிக்க வேண்டிய நடிகை ராகுல் ப்ரீத் சிங்குக்கு பதில் நடிகை அனு இமானுவேல் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

TNN 16 Oct 2016, 1:05 pm
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கவிருக்கும் படம் ‘துப்பறிவாளன். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ராகுல் ப்ரீத் சிங் தமிழில் இரண்டு படங்களில் மட்டும் நடித்துள்ளார். ஆனால், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
Samayam Tamil rakul preet singh left the film after having schedule clashes
‘துப்பறிவாளன்’படத்தில் ராகுல் ப்ரீத் சிங்குக்கு பதில் அனு இமானுவேல்!


தற்போது ‘தனி ஒருவன்’தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படம் மூலம் மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி ஆவதாக தெரிவித்தார் ராகுல். தற்போது ராகுல் ப்ரீத் சிங் ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து வருவதால் ‘துப்பறிவாளன்’படத்திற்கு வேண்டிய தேதியை அவரால் ஒதுக்கி கொடுக்கமுடியவில்லை.

ஆகையால் ராகுல் ப்ரீத் சிங் ‘துப்பறிவாளன்’ படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ‘துப்பறிவாளன்’ படத்தில் ராகுல் ப்ரீத் சிங் கேரக்டரில் மலையாள நடிகை அனு இமானுவேல் நடிக்கவுள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்