ஆப்நகரம்

Rakul Preet Singh: பிச்சை காரன் கூட நல்ல சட்டை போடுவான் - அழகிய நடிகை ரகுல்பிரீத் சிங்கை கிண்டல் செய்த ரசிகர்கள்

ரகுல்பிரீத் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

Samayam Tamil 2 Nov 2018, 7:17 pm
தெலுங்கு, தமிழ் படங்களில் முன்னனி நாயகியாக திகழ்ந்து வருபவர் ரகுல்பிரீத் சிங். தமிழில் தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல்பிரீத் சிங், தற்போது சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்துள்ளார்.
Samayam Tamil Rahul Preet Singh


இவர் அண்மையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

ரகுல்பிரீத் சிங் சில தினங்களுக்கு ஒரு புகைப்படம் முன் வெளியிட்டு அதில், “எவ்வளவு உயரத்துக்கு போனாலும் குழந்தைதனமான மனதை மட்டும் இழகக் கூடாது” என பதிவிட்டிருந்தார்.

ரசிகர்கள் விமர்சனம் :
இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள், “பிச்சைக்காரர்கள் கூட இப்போ நல்ல சட்டையை போடுகிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களை விட கேவலமாக சட்டையை போட்டு இருக்கிறீர்களே” என கண்டித்துள்ளனர்.


அதே போல் ஒருவர், “உங்களுக்கு சட்டை வேண்டுமானால் எங்களிடம் கேளுங்கள், அனுப்பி வைக்கிறோம்” என கூறியுள்ளார்.

ஒருவர், “இவ்வளவு மோசமான ஆடையை தைத்து தந்தது யார்?” என கேட்டுள்ளார்.

இதற்கு ரகுல் பிரீத் சிங், “எனது குழந்தை தனமான மனது” என பதிலளித்துள்ளார்.
ரகுல்பிரீத் சிங் கிழிந்த உடையைப் பார்த்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்