ஆப்நகரம்

அஜய் தேவ்கனுக்கு ஜோடியான ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்தி படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

TNN 18 Jan 2018, 6:01 pm
நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்தி படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil rakul preet singh will pair with ajay devgan
அஜய் தேவ்கனுக்கு ஜோடியான ரகுல் ப்ரீத் சிங்!


கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தப் படம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இந்தப் படத்தை வினோத் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது.

இந்தப் படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட் பக்கம் ªச்ன்றுள்ளார். பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை அகிவ் அலி இயக்கவுள்ளார். மேலும் படத்தில் நடிகை தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ரகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே நடித்துள்ள ‘அய்யாரி’ படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்