ஆப்நகரம்

சினிமாவில் தம்பியை நாயகனாக்கிய ‘தீரன்’ பட நடிகை!

‘தீரன்’ பட நடிகை ராகுல் ப்ரீத் சிங், தன்னுடைய தம்பியை தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 25 Feb 2019, 2:38 pm
அருண் விஜய்யின் ‘தடயற தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். அதையடுத்து கார்த்திக்கு ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
Samayam Tamil aman


அடுத்ததாக ‘தேவ்’ படத்தில் நடித்தார். இந்தப் படம் படு தோல்வியை கொடுத்தது. தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘என்.ஜி.கே.’ படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் கைவசம் 6 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது தம்பி அமனை ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார். ராகுல் ப்ரித் சிங் சகோதரர் அமன் ஏற்கனவே ஒரு பாலிவுட் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் அமன் தற்போது ஹீரோவாகியுள்ளார்.

இன்னும் இந்த படத்திற்கு டைட்டில் முடிவு செய்யப்படவில்லை. இந்தப் படத்தின் நாயகியாக மோஷிகா ஷர்மா நடிக்கிறார். இந்தப் படத்தை தாசரி லாரன்ஸ் இயக்கவுள்ளார். இந்த படத்தை ரஜினி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கவுள்ளது.

மேலும் தனது தம்பியுடன் இணைந்து இந்த படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கும் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்