ஆப்நகரம்

தாய்மாமனாக பதவி உயர்வு பெற்ற ராம்சரண்!

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணின் தங்கை ஸ்ரீஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Samayam Tamil 29 Dec 2018, 4:06 pm
தெலுங்கு சினிமாவில் தற்போதும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு ராம் சரண் என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர். ராம் சரண் தற்போது தெலுங்கு சினிமாவை கலக்கி வருகிறார். தற்போது ராம் சரண் தயாரிப்பு தொழிலிலும் இறங்கியுள்ளார்.
Samayam Tamil sreeja


இவர்தான் தமிழில் வெளியான ‘கத்தி’ படத்தின் ரீமேக்கை வாங்கினார். அந்தப் படத்திற்கு ‘கைதி நம்பர் 150’ என்று பெயர் வைத்து அதில் தனது தந்தை சிரஞ்சீவியை, விஜய் நடித்த கேரக்டரில் நடிக்க வைத்தார். மேலும் ராம் சரண் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படம் ஹிட்டானது.

இந்நிலையில் ராம் சரணின் தங்கை ஸ்ரீஜாவுக்கு நடிகர் கல்யாண் தேவ்வுககும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் ஸ்ரீஜாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் ஸ்ரீஜாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது ராம் சரண் தாய்மாமாவாகியுள்ளாரம். . இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்