ஆப்நகரம்

தளபதி பாடலில் மோடி, டிரம்ப்! இந்த வீடியோ எடிட் பண்ணவரை திருமணம் செய்யப்போகிறாராம் ராம் கோபால் வர்மா

தளபதி பட பாடலை டிரம்ப் மற்றும் மோடி பாடுவது போல எடிட் செய்யப்பட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார் ராம் கோபால் வர்மா.

Samayam Tamil 23 Apr 2020, 5:36 pm
தமிழ் சினிமாவில் நட்புக்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் தளபதி படத்தை குறிப்பிடாமல் இருக்க முடியாது. மணிரத்னம் இயக்கிய அந்த படத்தில் ரஜினி-மம்மூட்டி நட்பை சுற்றித்தான் மொத்த கதைகளும் இருக்கும்.
Samayam Tamil Narendra Modi and Trump


அந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த 'காட்டு குயிலு' பாடலை ரஜினி-மம்மூட்டி இருவரும் மாற்றி மாற்றி பாடுவது போல உருவாக்கப்பட்டிருக்கும்.

தற்போது ரஜினி-மம்மூட்டிக்கு பதிலாக இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் அந்த பாடலை பாடுவது போல எடிட் செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ள அந்த வீடியோவை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவை எடிட் செய்தவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


அது சிறப்பாக இருக்கிறது. தமிழில் இருக்கும் பாடலை மொழிபெயர்த்து சொல்லுங்கள் என பாலிவுட் நடிகை ரவீனா டேன்டன் கேட்டுள்ளார்.

எப்போதும் சர்ச்சையாக பேசும் இயக்குனர் ராம் கோபால் வர்மா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். ட்விட்டரில் தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் அவர் பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் தான் பேசியதை டிக்டாக் செய்து ஒரு பெண் வீடியோ வெளியிட்டிருந்ததை பார்த்த ராம் கோபால் வர்மா அந்த பெண்ணுக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஆச்சர்யம் ஏற்படுத்தி இருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்