ஆப்நகரம்

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் சினிமா

பாகுபலி படத்தைப் போன்று ராமாயணம் படத்தை உருவாக்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.

TNN 10 May 2017, 5:23 pm
பாகுபலி படத்தைப் போன்று ராமாயணம் படத்தை உருவாக்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.
Samayam Tamil ramayanam made by 3 producers with rs 500 crore budget
ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் சினிமா


இந்திய சினிமாவில் பாகுபலி பட வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர்களுக்கு புராணா கதைகள், இதிகாங்கள் போன்றவற்றின் மீது ஆர்வம் வந்துவிட்டது. 3 தயாரிப்பாளர்கள் ரூ.500 கோடி பட்ஜெட்டில் ராமாயணத்தை படமாக தயாரிக்க முன்வந்துள்ளனர்.

ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என்று 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தை அல்லு அரவிந்த், மது மந்தீனா மற்றும் நமீத் மல்கோத்ரா ஆகிய 3 தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இவர்கள் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தயாரித்து 3 பாகங்களாக இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதும் பணி கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக அல்லு அரவிந்த், ராஜமௌலியின் மகதீரா படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்