ஆப்நகரம்

தெலுங்கில் சக்கைப்போடு போடும் சமந்தாவின் 'ரங்கஸ்தலம்'!!

ராம்சரண், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

Samayam Tamil 1 Apr 2018, 8:16 pm
ராம்சரண், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.
Samayam Tamil தெலுங்கில் சக்கைப்போடு போடும் சமந்தாவின் ரங்கஸ்தலம்!!
தெலுங்கில் சக்கைப்போடு போடும் சமந்தாவின் 'ரங்கஸ்தலம்'!!


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருவதால், கடந்த ஒரு மாத காலமாக தமிழில் புதுப்படங்கள் எதுவும் வெளியாகாமல் உள்ளது. இதனால், பிற மொழிப் படங்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சுகுமார் இயக்கத்தில் ராம்சரண்,சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படம், வசூலில் சாதனைப் படைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே, அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் 1 மில்லியன் கிளப்பில் இணைந்தது.

இதுதவிர, உலகமுழுவதும் இப்படம் இதுவரை 46.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், விநியோகஸ்தர்களுக்கு ரூ. 30 கோடி கிடைக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழ்நாட்டில் இப்படம் இதுவரை 76 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்