ஆப்நகரம்

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் 37 டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்!

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிக்காக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து 37 டேக் எடுத்துள்ளனர் படக்குழுவினர்.

Samayam Tamil 11 Mar 2019, 5:53 pm
1980-90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு நடிப்பு முழுக்கு போட்டிருந்தார். பின்னர் சின்னத்திரையில் அறிமுகமானார். அதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளத்திரையில் ரீஎன்ட்ரியானார்.
Samayam Tamil ramya-krishnan


சினிமாவில் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார். ‘பாகுபலி’ படத்தின் தாய் ராஜமாதாவாக நடித்தது இன்னும் பலரின் கண்ணுக்குள் அப்படியே நிற்கும் தானே. பல படங்களில் அவர் மிரட்டலாக நடித்திருப்பார்.

இந்நிலையில் தியாகராஜா குமாரராஜா, நடிகர் விஜய்சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சமந்தா, மிஷ்கின், பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆபாசமாக நடித்துள்ளாராம்.

படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சியை இரண்டுநாட்களாக படமாக்கினார்களாம். அதிலும் ரம்யா கிருஷ்ணனை வைத்த 37 டேக் எடுத்தார்களாம். நடிகை ரம்யா கிருஷ்ணன் பொறுமையாக இருந்து நடித்துக் கொடுத்துள்ளார். இந்தப் படம் வரும் 29ல் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்