ஆப்நகரம்

மருமகனுடன் மல்லுகட்டும் மாமியார் வேடத்தில் ரம்யாகிருஷ்ணன்!

நடிகை ரம்யாகிருஷ்ணன், மருமகனுடன் மல்லுகட்டும் அதிரடி மாமியாராக ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 22 Jun 2018, 6:14 pm
நடிகை ரம்யாகிருஷ்ணன், மருமகனுடன் மல்லுகட்டும் அதிரடி மாமியாராக ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil ramya


நடிகை ரம்யாகிருஷ்ணன் 1983ல் ‘வெள்ளை மனசு’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் ‘படையப்பா’. இந்த படத்தில் அவர் நடித்த நெகட்டிவ் ரோல் இப்போதுவரை பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை அடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இருந்தாலும் அவர் பெயர் சொல்லும்படியாக அமையவில்லை. சமீபத்தில் அவர் ‘பாகுபலி’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் ரம்யா கிருஷ்ணனுக்கு மற்றொரு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

இந்தநிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரம்யாகிருஷணன் மாமியார் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ போர் சம்பந்தப்பட்ட கதையாம். அதனால், மீண்டும் தனது அதிரடியான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி வருகிறார் ரம்யாகிருஷ்ணன்.

மேலும், இதே ரம்யாகிருஷ்ணன் இதற்கு முன்பு நாகசைதன்யாவின் தம்பி அகில் நடித்த ஹலோ படத்தில் அவரது அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்