ஆப்நகரம்

இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆன ரம்யா பாண்டியன்: சூர்யாவுடன் ஒன்று

நடிகை ரம்யா பாண்டியன் புதிதாக இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2020, 5:57 pm
ஜோக்கர், டம்மி டப்பாஸு, ஆண் தேவதை என நடிகை ரம்யா பாண்டியன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளவர் ரம்யா பாண்டியன். அந்த படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றன.
Samayam Tamil Ramya Pandian


ஆனால் அதையெல்லாம் தாண்டி பெரிய அளவில் அவரை வைரலாகியது வீட்டின் மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் தான். சேலையில் அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

என் வாழ்க்கையை மாற்றியது அந்த போட்டோஷூட் தான் என தற்போது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார் ரம்யா பாண்டியன்.

அதன் பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் பங்கேற்றார். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இது பற்றி ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேட்டதற்கு பதில் அளித்த ரம்யா பாண்டியன் "குக் வித் கோமாளி என் இதயத்திற்கு நெருக்கமானது. அந்த நிகழ்ச்சி மூலமாக எனக்கு பல குடும்பங்கள் கிடைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 9வது சீசனில் ஜட்ஜாக பங்கேற்று வருகிறார் ரம்யா பாண்டியன். அடுத்து எதாவது படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளீர்களா என கேட்டதற்கு தற்போது இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறியுள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் மற்றும் சிவி குமார் தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தெரிவித்துள்ளார். மற்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்